அதிர்ச்சி செய்தி !பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான கைக்கடிகாரங்கள் விற்பனை…

Default Image

75 லட்சம் ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரங்கள் சென்னையில் உள்ள  பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாகத் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரோலக்ஸ், பர்பெரி, ராடோ, சிட்டிசன் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி கைக்கடிகாரங்கள் சென்னையில் விற்பனை செய்யப்படுவதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் ஜெயராமன் தலைமையில் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அவர்கள் சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

அப்போது, ஜெய்குரு தேவ் என்ற கடையில், ரோலக்ஸ், பர்பெரி, ராடோ, சிட்டிசன் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் வேறு சில வெளிநாட்டு நிறுவன பெயர்களில் கைக்கடிகாரங்கள் போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சந்தையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள், அங்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

கடைக்கு சொந்தமான குடோனை சோதனையிட்டதில் ஐந்தாயிரத்து 200 கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்மதிப்பு 75 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடையின் உரிமையாளர் ஜவானாராம் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த போலி கைக்கடிகாரங்கள் எங்கு தயாரிக்கப்பட்டு, எப்படி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது என்பது குறித்து விசாரிக்க இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்