இணையத்தை கலக்கும் பத்மாவத் கூமர் நடனம்!அமெரிக்காவில் பனித்தரையில் கலக்கிய இளம்பெண் ….
அமெரிக்காவின் சறுக்கோட்ட வீராங்கனை பனித்தரையில், பத்மாவத் திரைப்படத்தில் தீபிகா படுகோன் ஆடியுள்ள கூமர் நடனம் போல , கூமர் நடனம் இணையதளங்களில் பரவி வருகிறது. ராஜஸ்தானைச் சேர்ந்த மயூரி பண்டாரி என்கிற சறுக்கோட்ட வீராங்கனை பெற்றோருடன் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.
பாரம்பரிய மற்றும் மேற்கத்திய நடனத்திலும் வல்லவரான அவரைப் பத்மாவதி படத்தில் தீபிகா படுகோன் ஆடிய கூமர் நடனம் கவர்ந்துவிட்டது.
இதையடுத்து மயூரியும் காலில் சக்கரக் காலணிகளைக் கட்டிக்கொண்டு பனித்தரையில் பம்பரமாகச் சுழன்று நடனம் ஆடியுள்ளார். இந்த நடனக்காட்சியும் இணையதளங்களில் பரவி லட்சக்கணக்கானோரைக் கவர்ந்து வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.