விழுப்புரத்தில் சோகம்.! லாட்டரி சீட்டால் ஒரே குடும்பத்தை சார்ந்த 5 பேர் தற்கொலை.!

Default Image
  • அருணுக்கு மூன்று நெம்பர் லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உள்ளது. மேலும் தொழிலில் வருமானம் இல்லாததால் பண கஷ்டதில் இருந்தது உள்ளார்.
  • இதனால் நேற்று இரவு 11:30 மணிக்கு மனைவி மற்றும் மகள்களுக்கு சயனைடு கொடுத்து  விட்டு அருணும் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம்மாவட்டம் சித்தேரிக்கரையை சேர்ந்தவர் அருண் (33) இவர் நகை செய்யும் தொழிலாளி.  இவரது மனைவி சிவகாமி (27) .இவர்களுக்கு  தர்ஷிணி (4), பிரியதர்ஷிணி(3), பாரதி(1) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

அருணுக்கு மூன்று நெம்பர் லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உள்ளது. மேலும் தொழிலில்  வருமானம் இல்லாததால் பண கஷ்டதில் அருண் இருந்து உள்ளார். இதனால் விரக்தியடைந்த அருண் நேற்று இரவு 11:30 மணிக்கு நகை தொழிலுக்கு பயன்படுத்தப்படும் சயனைடு விஷத்தை தனது மனைவி மற்றும் மகள்களுக்கு  கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில்  ஈடுபட்டனர்.

இதை அறிந்த அருண் வீட்டின் அருகில் இருந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள்  ஐந்து பேரும் இறந்துவிட்டதாக கூறினர்.

இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம்  உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து  வருகின்றனர்.

தற்கொலைக்கு முன் அருண் வெளியிட்ட “வாட்ஸ் ஆப்” வீடியோவில்  மூன்று நெம்பர் லாட்டரியால் தான் இந்த நிலைக்கு ஆளானதாகவும், எனவே லாட்டரி விற்பனையை ஒழிக்க வேண்டும் மற்ற குடும்பங்களை  காப்பாற்றுங்கள் என அந்த வீடியோவில் கூறியிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்