அமலுக்கு வந்தது.! குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் ..!
- குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா இரு அவையிலும் நிறைவேற்றப்பட்டத்தை தொடர்ந்து.
- நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.குடியரசு தலைவர் ராமநாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து உள்ளார்.
பாகிஸ்தான் , வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை இந்தியா வந்து தங்கிய முஸ்லிம்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என இரண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூறியது.
இதை தொடர்ந்து மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்தார். மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்.பிக்களும், எதிராக 80 எம்.பிக்களும் வாக்களித்தனர்.இதை தொடர்ந்து மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
பின்னர் மாநிலங்களவையிலும் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.இந்த குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 பேர் வாக்களித்தனர். முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு மட்டும் குடியுரிமை மசோதா வழிவகை செய்கிறது.இதனால் முஸ்லீம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மசோதவை எதிர்த்து வட கிழக்கு மாநிலங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளது.இந்நிலையில் இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசு தலைவர் ராமநாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து உள்ளார்.