இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி !
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் இன்று கடும் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு அதிகமாகவும், நிஃப்டி 250 புள்ளிகளுக்கு அதிகமாகவும் சரிவடைந்தன.
நேற்று காலை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன் நன்மையளிக்கக் கூடிய அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து உயர்ந்தன. நேற்று பட்ஜெட்டில் நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டதையடுத்து 300 புள்ளிகள் சரிவைச் சந்தித்த சென்செக்ஸ் பின்னர் மீண்டது.
இந்நிலையில் இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடனேயே தொடங்கின. சென்செக்ஸ் நேற்று 35 ஆயிரத்து 906 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்த நிலையில். இன்று 199 புள்ளிகள் சரிவுடன் 35 ஆயிரத்து 707 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தொடர்ந்து புள்ளிகள் சரிந்த நிலையில் வர்த்தக நேர முடிவில் 839 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் 35 ஆயிரத்து 66 புள்ளிகளாக இருந்தது அதேபோன்று தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 256 புள்ளிகள் குறைந்தது. 78 புள்ளிகள் சரிவுடன் 10 ஆயிரத்து 938 புள்ளிகளில் தொடங்கிய நிஃப்டி தொடர்ந்து சரிந்து வர்த்தக நேர முடிவில் 10 ஆயிரத்து 760 புள்ளிகளாக இருந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.