கழுத்தில் உள்ள கருமையை போக்க வீட்டில் இதை செய்தால் போதும்.!
- தயிரை கையிலெடுத்து கழுத்துப் பகுதியில் மெதுவாக தேய்த்து ஊற வைக்கவும். பின்னர் 5 நிமிடம் கழித்து வெந்நீரை வைத்து கழுத்துப் பகுதியில் அழுத்தி துடைத்து வந்தால் கழுத்து பகுதியில் இருக்கும் கருப்பு மறையும்.
பொதுவாக சிலருக்கு முகம் பார்க்க வெள்ளையாக இருக்கும். ஆனால் கழுத்துப்பகுதி கருப்பாக காணப்படும். இதற்கு காரணம் சிலருக்கு ஹார்மோன் குறைபாடு , அதிக நேரம் வெயிலில் நிற்பது, தங்கம் மற்றும் வெள்ளி செயின் அணிவதாலும் கழுத்து கருப்பாக காணப்படுவது உண்டு.
அந்த வகையில் அதை போக்க கண்ட கண்ட கிரீமை பயன்படுத்தி செலவு செய்வதை விட வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு அவற்றை சரி செய்து கொள்ளலாம் அதை இப்பொது பார்க்கலாம்.
- தயிரை கையிலெடுத்து கழுத்துப் பகுதியில் மெதுவாக தேய்த்து ஊற வைக்கவும். பின்னர் 5 நிமிடம் கழித்து வெந்நீரை வைத்து கழுத்துப் பகுதியில் அழுத்தி துடைத்து வந்தால் கழுத்து பகுதியில் இருக்கும் கருப்பு மறையும்.
- கோதுமை மாவு ,ஓட்ஸ் பவுடர் ,பாசிப்பயறு மாவு ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்துக் கொண்டு பால் சேர்த்து கலந்துகொள்ளவும் பின்னர் அதனை குழைத்து கருப்பாக உள்ள இடத்தில் தேய்த்து பின்னர் கழுவினால் கருப்பு நீங்கும்.
- சிறிதளவு ரோஸ்வாட்டர் , சிறிய வெங்காயச்சாறு , ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கருப்பாக உள்ள இடத்தில் லேசாக மசாஜ் செய்து வந்தால் கழுத்தில் இருக்கும் கருப்பு சிறிது சிறிதாக மறையத் துவங்கும்.