தலைவர்-168 படத்திற்காக மிக பிரமாண்ட பட வாய்ப்பை தவறவிட்ட முன்னணி நடிகை!

Default Image
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 168வது திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
  • அவர் இதற்கு முன்னர் பொன்னியின் செல்வன் படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், தற்போது அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் அவரது 168 திரைப்படமாக உருவாகும் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் மீனா, குஷ்பு ஆகியோர் மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்துள்ளனர்.

இப்படத்தில் மேலும், ஒரு முக்கிய நடிகையாக கீர்த்தி சுரேஷ் கமிட்டாகியுள்ளார். இவர் இதற்கு முன்னர் மணிரத்னம் இயக்கும் பிரமாண்ட சரித்திரப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் கமிட்டாகி இருந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது தாய்லாந்தில் தொடங்கியுள்ளது. ஆனால், தற்போது ரஜினி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தலைவர்-168 படத்துக்காகத்தான் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை கீர்த்தி சுரேஷ் தவறவிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்