விசிக தலைவர்களை தாக்கிய பிஜேபியினரை கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம்…!
கரூர் மற்றும் மயிலாடுதுறையில் விடுதலைச்சிறுத்தைகள்மீது
கொலைவெறிதாக்குதல் நடத்திய பிஜேபி கட்சியினரை கண்டித்து…
சேலம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 3-11-17 அன்று காலை 11 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்பாட்டமானது விசிக மாநகர மாவட்ட செயலாளர் சேலம் கோ.ஜெயச்சந்திரன் முன்னிலையில் கடலூர் தாமரை செல்வன் தலைமை நெறியாளுகையில் நடைப்பெற்றது.
சிபிஐஎம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு, சிபிஐ மாவட்ட நிர்வாக குழு க.பாரதி, ஜெயப்பிரகாஷ் காங்கிரஸ் மாவட்ட தலைவர், யூனுஸ் அகமது தமுமுக மாவட்ட செயலாளர், முகமது ரபீக் எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர்,
விசிக மாவட்ட செயலாளர்கள் சிக.முத்து கிழக்கு, க.வசந்த் வடக்கு, ஏ.அய்யாவு மேற்கு, மாநகர மாவட்ட துணைச் செயலாளர்கள் இ.காஜாமைதீன், வேலுநாயக்கன், மாவட்ட பொருளாளர் சுகையல் ரகுமான் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.