கொளத்தூரில் கொள்ளையடிக்கப்பட்ட ஒன்றை கிலோ நகைகள் மீட்க்கப்பட்டதா..??
சென்னை கொளத்தூரில் கொள்ளையடிக்கப்பட்ட ஒன்றை கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொளத்தூரில் உள்ள நகைகக்கடையில் மூன்றரை கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட நாதுராம் மற்றும் கூட்டாளிகள் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட நிலையில் 10 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனை அடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் எங்கு நகைகளை விற்றார்கள் என்ற விவரத்தை போலீசார் சேகரித்தனர். இந்த விசாரணையில் பாதி நகைகளை பிராட்வேயில் உள்ள அடகு கடையில் விற்றதாகவும், மற்ற நகைகளை பெங்களூரில் உள்ள நகை அடகுக்கடையில் விற்றதாகவும் நாதுராம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில் நாதுராம் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் பிராட்வே அடகு கடையில் இருந்து ஒன்றை கிலோ நகைகளை மீட்டனர். மீதம் உள்ள நகைகளை பெங்களூருவிலிருந்து கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.