ராணுவ முகாமில் புகுந்த பயங்கரவாதிகள் ! 73 ராணுவ வீரர்கள்உயிரிழப்பு !12 பேர் படுகாயம் !

Default Image
  • நேற்று மாலை ராணுவ முகாமில் புகுந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
  • இந்த தாக்குதலில் 73 நைஜர் ராணுவ வீரர்கள் இறந்து உள்ளனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

நைஜர்யாவில் கடந்த சில ஆண்டுகளாக மாலி ,  பர்கினோ பாசோ போன்ற ஒரு சில ஆப்பிரிக்க நாடுகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகமாக உள்ளது.நைஜரியா எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாடுவதால் நைஜர் ராணுவம் அண்டை நாடான மாலி ராணுவத்துடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் நாடு ஆப்பிரிக்க நாடுகளில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு தங்கள் ராணுவ வீரர்களையும் அனுப்பியுள்ளது.மாலி நாட்டின் எல்லைக்கு அருகே உள்ள இனேட்ஸ் நகரில் நைஜர் ராணுவத்தினர் முகாம் மிட்டு இருந்தனர்.

அப்போது  முகாமில் நேற்று மாலை புகுந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 73 நைஜர் ராணுவ வீரர்கள் இறந்து உள்ளனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். ஆனால் இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்