ரஷ்யாவில் விமான தாங்கி கப்பல் தீ விபத்து.! 3 பேர் காணவில்லை.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- ரஷியா கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- இந்நிலையில் கடந்த வருடம் கப்பலில் கிரேன் ஒன்று மேல்தளத்தில் விழுந்ததில் பழுது ஏற்பட்டது.
ரஷ்யாவின் ஒரே விமானம் ஆகிய தாங்கி கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியுமாகியுள்ளன. அட்மிரல் கஸ்னெட்சோவ் (Russian aircraft carrier Admiral Kuznetsov) எனும் அந்த கப்பலில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது என தகவல் வந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக பழுது பார்க்கப்பட்டு வரும் இந்த கப்பலில் ஏற்கனவே 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கிரேன் ஒன்று மேல்தளத்தில் விழுந்ததில் பழுது ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது. கப்பலின் முதல் தளத்தில் தீப்பற்றி கரும்புகை சூழ்ந்து காட்சியளிக்கிறது. அதில் பணியிலிருந்த 3 பேரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.