விஷால் பெயரை நீக்க வேண்டும் என சிம்புவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு ..!

Default Image
  • தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனிடம் இருந்து ரூ.1 கோடி மன நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என  சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார்.
  • இந்த மனுவில் எதிர்மனுதாரராக நடிகர் விஷாலின் பேரை சேர்ந்து இருந்தார்.

நடிகர் சிம்பு “அன்பானவன் அடங்காவதவன் அசராதவன்” படத்தில் நடித்தற்கு தனக்கு முழு சம்பளத்தையும் தரவில்லை என படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.இப்படத்தில் ஏற்பட்ட இழப்பை நடிகர் சிம்புவிடம் இருந்து வசூல் செய்து தருமாறு மைக்கேல் ராயப்பன் புகார் கொடுத்தார்.

இந்த விவகாரத்தில் மைக்கேல் ராயப்பன் ஊடகங்களில் தனக்கு கேட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக பேட்டி அளித்ததாகவும் ,அதனால் மைக்கேல் ராயப்பனிடம் இருந்து ரூ.1 கோடி மன நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார்.

இந்த மனுவில் நடிகர் சங்கத்தின் பொதுசெயலாளர் விஷாலை எதிர்மனுதாரராக சார்ந்து இருந்தார்.இந்நிலையில் இந்த மனு நேற்று நீதிபதி செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நடிகர் சங்கத்தின் நிர்வாகியாக தமிழக அரசு சிறப்பு அதிகாரியை நியமித்து உள்ளது.

இப்போது நடிகர் விஷால் நடிகர் சங்கத்தின் நிர்வாகியாக இல்லை என்று கூறப்பட்டது.இதை ஏற்று கொண்ட நீதிபதி இந்த வழக்கில் நடிகர் சங்கத்தின் நிர்வாகியாக நியமிக்கப்பட்ட  சிறப்பு அதிகாரியை எதிர்மனுதாரராக சேர்க்கவும் ,நடிகர் விஷாலின் பேரை நீக்கவும் உத்தரவு விடப்பட்டது.மேலும் இந்த வழக்கை ஜனவரி 03-ம் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்