தோனி எனது பாதி வேலையை குறைத்து விடுகிறார் – சுழற்பந்து வீச்சாளர் குல்தீப்
இந்திய கிரிகெட் அணி தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-1 என்கிற கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
அடுத்து 6 ஒருநாள் போட்டி தொடரில் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கோலி, ரஹானேவின் அதிரடியான ஆட்டத்தால் போட்டியை வென்றது இந்திய அணி. இதில் சிறப்ப்பாக பந்துவீசிய குல்தீப் 10 ஓவர் வீசி 34 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டை எடுத்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், சுழற்பந்து வீச்சாளரான எனக்கு மஹி (தோனி) 50 சதவீத வேலையை எளிதாக்கி விடுகிறார். அவரது அனுபவம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. நிறைய போட்டிகள் விளையாடி உள்ளதால் எல்லா வீரர்களும் எப்படி விளையாடுவார்கள் என தெரிந்து எனக்கு உதவுவதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்