குரூப்-1 நேர்முகத் தேர்வு குறித்து- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு..!
- குரூப்-1 நேர்முகத்தேர்வில் முறைகேடு நடக்க உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
- தேர்வர்களை மூத்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் குழு நேர்காணல் செய்வார்கள்.
அரசுத் தேர்வு ஆர்வலர்கள் எதிர்பார்த்த TNPSC குரூப் 1-ன் முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பர் 23 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுத் தேர்வு பணியாளர் ஆணையமான TNPSC தெரிவித்துள்ளது. குரூப் 1-ன் MAIN Exam எனப்படும் முதன்மைத் தேர்வு கடந்த ஜூலை மாதம் 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதில் யார் யார் வெற்றி பெற்றார்கள் என்பது தொடர்பான பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுருந்தது.
இந்நிலையில், தற்போது குரூப்-1 நேர்முகத்தேர்வில் முறைகேடு நடக்க உள்ளதாக புகார் எழுந்து வருகிறது. குரூப்-1 நேர்முகத்தேர்வில் தேர்வர்களை மூத்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பல்கலை கழகத்தின் துணை வேந்தர் மற்றும் தேர்வாணைய உறுப்பினர்கள் அடங்கிய குழு நேர்காணல் செய்வார்கள் என்று TNPSC அறிவித்துள்ளது.
மேலும் மதிப்பெண்கள் கணினியில் மட்டுமே பதிவு செய்யப்படும். மற்றும் பென்சிலால் பதிவு செய்யும் முறை நடைமுறையில் இல்லை எனவும் அறிவித்துள்ளது.