திரிஷா இல்லனா நயன்தாரா! மெகா ஸ்டார் ஜோடியாக நடிக்கப்போவது யார்?!
- சிரஞ்சீவியின் 152வது படத்தை கொரட்டலா சிவா இயக்க உள்ளார். சிரஞ்சீவின் மகன் ராம்சரண் தான் இப்படத்தை தயாரிக்கிறார்.
- இப்படத்தில் நடிக்க வைக்க த்ரிஷா அல்லது நயன்தாரா நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
சிரஞ்சீவி தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கி வெற்றிகரமாக பயணித்து வருகிறார். அதில் 150வது படமாக கைதி 150 படமும், 151வது படமாக சைரா நரசிம்மா ரெட்டி படமும் மெகா ஸ்டாருக்கு மெகா ஹிட்டானது.
இவரது 152வது படத்தை தெலுங்கு முன்னணி இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார். கடந்த இரண்டு படங்களை போல சிரஞ்சீவின் மகன் ராமச்சரன் தான் இப்படத்தையும் தயாரிக்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் நாளை தொடங்க உள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா மற்றும் த்ரிஷா இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. யார் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என இன்னும் உறுதியாக தெரியவில்லை.