தமிழக அரசு தனது முதலாளி தனத்தை காண்பிக்கிறது-கமலஹாசன்
மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளது. ஆனால் நடுத்தர மக்களுக்கு பாராமுகமாக உள்ளது” என கமல்ஹாசன் கூறியுள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 10-ம் தேதி உரையாற்றுவதற்காக அமெரிக்கா கிளம்பிய போது சென்னை விமான நிலையத்தில் நடிகர் கமல் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், “கிராமத்தின் பக்கம் மத்திய அரசின் பார்வை திரும்பி இருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் தமிழகம் பல ஆண்டுகளாகவே புறக்கணிக்கப்படுவது ஒரு சோகதையாக தொடர்கிறது. பட்ஜெட் குறித்து அறிஞர்களுடன் ஆலோசித்த பின்னரே எனது கருத்தை தெளிவாக கூற முடியும்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியம் பிடிக்கப்பட்டதற்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்ததோடு, தமிழக அரசின் செயல் முதலாளித்துவத்தை காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.