மாநிலங்கவையில் இன்று குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல்..! பாஜகவுக்கு ஆதரவு கிடைக்குமா?

Default Image
  • இன்று மாநிலங்கவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யவுள்ளனர்.
  • மாநிலங்கவையில் இந்த மசோதா நிறைவேற்ற 121 எம்.பிக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.

பாகிஸ்தான் , வங்காளதேசம் மற்றும்  ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை இந்தியா வந்து தங்கிய முஸ்லிம்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என இரண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூறிருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்தார். மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்.பிக்களும், எதிராக 80 எம்.பிக்களும் வாக்களித்தனர்.இதை தொடர்ந்து மக்களவையில் குடியுரிமை  சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதை தொடர்ந்து இன்று மாநிலங்கவையில் அமித்ஷா குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்ய உள்ளார். மாநிலங்கவையில் இந்த மசோதா நிறைவேற்ற 121 எம்.பிக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.

மாநிலங்கவையில் மொத்தம்  245 இடங்களில் தற்போது 5 இடங்கள் காலியாக இருப்பதால் 240 எம்.பிக்கள் உள்ளனர். இந்த சூழ்நிலை காங்கிரஸ், திமுக , திரிணாமுல் காங்கிரஸ், சமாஜவாதி போன்ற கட்சிகளை சார்ந்த எம்பிக்கள் 112 பேர் உள்ளனர்.

பாஜக ,அதிமுக , பாமக மற்றும் ஜனதாதளம் ஆகிய கட்சிகளை சார்ந்த 128 எம்பிக்கள் உள்ளனர்.  எனவே குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்கவையில் எளிதாக  நிறைவேற வாய்ப்பு  உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்