சென்னை – பெங்களூர் நகரங்களிடையே பாதுகாப்புத்துறை சார்ந்த தொடர் கட்டமைப்புகள் !
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பாதுகாப்புத்துறை சார்ந்த 2 தொடர் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார்.
சென்னை – பெங்களூர் நகரங்களிடையே பாதுகாப்புத்துறை சார்ந்த தொடர் கட்டமைப்புகள் ஏற்படுத்தப் படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில், பாதுகாப்புத்துறைக்காக மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பாதுகாப்புத்துறை சார்ந்த 2 தொடர் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார். இவற்றில் முதல்கட்டமாக, தமிழகத்தின் தலைநகர் சென்னை, கர்நாடக தலைநகர் பெங்களூர் ஆகிய நகரங்களை இணைக்கும்வகையில், தொடர் கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்று அவர் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.