பங்குசந்தையில் நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு விலக்கு!
நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியது, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை வாங்கி விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வழங்கப்பட்டு வந்த நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கான விலக்கு திரும்பப் பெறப்படுகிறது.
பங்குசந்தையில் பங்குகளை வாங்கி வைத்திருந்து, ஒரு வருடத்திற்கு பின்னர் விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு இதுவரை முழு வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இவ்வாறு ஒரு வருடம் வைத்திருந்த போதிலும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலான லாபத்திற்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஜனவரி 31 – 2018 வரையிலான காலகட்டத்திற்கு மூலதன ஆதாயத்திற்கு வரி விதிக்கப்படாது. என தெளிவுடுத்தப்பட்டுள்ளது. வருமான வரி சட்டம் 112ஏ (112A) பிரிவின் கீழ், பங்கு பரிவர்த்தனை வரி செலுத்தப்பட்ட, நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு வரி 10 சதவீதமாக இருக்கும்.
அனைத்து கம்பெனிகளும், வருவாய் எப்படி இருந்தபோதிலும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும், அப்படி தாக்கல் செய்யாவிட்டால் அத்தகைய கம்பெனிகள் சட்டநடவடிக்கைக்கு பொறுப்பானவை ஆகும். 285பிஏ (285BA) பிரிவின் கீழ் வருமான வரி தாக்கல் செய்யாமல் இருப்பதற்கான அபராதம் நாள் ஒன்றுக்கு 500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. ஐசிடிஎஸ் (ICDS) எனப்படும் வருமான கணக்கீடு மற்றும் கணக்குகாட்டும் தரமுறைகளின்படி, அந்நிய செலாவணி சந்தையில் ஆதாயம் மற்றும் இழப்பு, 43ஏஏ (43AA) பிரிவின் கீழ் அனுமதிக்கப்படும் ஆகிய அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.