ஜனவரியில் சந்தைக்கு வர காத்திருக்கும் டாடா மோட்டார்ஸ்…!!! 15 லட்சத்தில் மின்சார கார்கள்…!!!

Default Image
  • களத்தில் குதித்தது  டாடா மோட்டார்ஸ், மின்சார கார் தயாரிப்பில் ஆர்வம்.
  • ஆரம்ப விலை 15 இலட்சம் என நிர்ணயம்.

தற்போது இந்திய சந்தையில் அனைத்து முன்னணி வாகன நிறுவனங்களும்  மின்சார  வாகன தயாரிப்பில் இறங்கி அதில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், டாடா நிறுவனம்  அதன் முதல் மின்சார  எஸ்யுவியை அறிமுகம் செய்ய தற்போது தயாராகிவிட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய  நெக்ஸான் இவி என்ற  தனது முதல் மின்சார  எஸ்யுவியை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய உள்ளது.நெக்ஸான் பேஸ்லிஃப்ட் மாடலை அடிப்படையாகக் கொண்டே இந்த நெக்ஸான் இவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. முதலில் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் இந்த மின்சார கார்கள்  விற்பனைக்கு வர தயாராக உள்ளது.

Image result for tata electric suv

அதிலும் குறிப்பாக இந்த கார்கள் நாட்டின் முக்கிய நகரங்களான மும்பை, புனே, பெங்களூரு, அகமதாபாத், புதுடெல்லி, கல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, பிற நகரங்களுக்கு விற்பனை விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கார்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்  முதல் விற்பனைக்கு சந்தைக்கு  வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின்  விலை ரூ.15 லட்சம் முதல் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்