சுவாரஸ்யமான காதல்..! ஆன்லைன் மூலம் சந்தித்த காதலனுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்த காதலி..!
- அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா சார்ந்த டான் சம்மர்ஸ் சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டது.
- இவருக்கு பொருந்தக்கூடிய சிறுநீரகம் கிடைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறினர்.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா சார்ந்த டான் சம்மர்ஸ் என்பவருக்கு 20 வயதில் கீல்வாதம் தாக்கி உள்ளது.இதனால் மருத்துவர்கள் இன்னும் 10 வருடத்தில் கழித்து உங்களுக்கு சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என கூறினர்.
மருத்துவர்கள் கூறியபடியே டான் சம்மர்ஸ்க்கு 30 வயதில் சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் சென்று சிறுநீர் நன்கொடையாக பட்டியலை விண்ணப்பித்தார். ஆனால் இவருக்கு பொருந்தக்கூடிய சிறுநீரகம் கிடைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறினர்.
இந்நிலையில் டான் சம்மர்ஸ் டேட்டிங் இணையதளம் ஒன்றில் லீசா என்ற பெண்ணை சந்தித்து பேசிய கொண்டுவந்துள்ளார். லீசா மருத்துவமனை சென்று சிறுநீரகத்தை பரிசோதித்த போது அவருடைய சிறுநீரகம் அப்படியே டான் சம்மர்ஸ்க்கு பொருந்தியது.
இதுபோன்று லட்சத்தில் ஒருவருக்குத்தான் அமையும் என மருத்துவர்கள் கூறினர். உடனே லீசா தன்னுடைய சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்த பின்னர் இருவருக்கும் இடையே காதல் வந்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி லீசா சிறுநீரகத்தை தானமாக கொடுத்தார்.
இந்த தம்பதிகள் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தங்கள் வாழ்க்கையில் சிறுநீரக நன்கொடை அளிப்பவர்க்ளுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தனர்.