நடிப்பும்-உடலுறவும் ரொட்டி , வெண்ணெய் போன்றது – கார்த்திக் ஆர்யன்..!
- நடிகர் கார்த்திக் ஆர்யன் “பை இன்வைட் ஒன்லி” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது ஒரு வித்தியாசமான கேள்வி கேட்கப்பட்டது.
- அதற்கு கார்த்திக் ஆர்யன் “நடிப்பு , செஸ் இரண்டும் ரொட்டி மற்றும் வெண்ணெய் போன்றது நீங்கள் வெளியேற முடியாது என கூறியது.
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் கார்த்திக் ஆரியன். இவர் “சோனு கே திட்டு கி ஸ்வீட்டி” என்ற ஹிந்தி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இப்படம் இந்தி திரை உலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது “தோஸ்தானா 2” மற்றும் “பூல் பூலையா 2″ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கார்த்திக் ஆர்யன் சமீபத்தில் “பை இன்வைட் ஒன்லி” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்திக் ஆர்யனிடம் ஒரு வித்தியாசமான கேள்வி கேட்கப்பட்டது. அது என்னவென்றல் உங்கள் வாழ்க்கையில் இருந்து வெளியேற எளிதானது எது நடிப்பு அல்லது செஸ் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு கார்த்திக் ஆர்யன் “நடிப்பு , செஸ் இரண்டும் ரொட்டி மற்றும் வெண்ணெய் போன்றது நீங்கள் வெளியேற முடியாது. நடிப்பும் அன்பும் எனக்காக கைகோர்த்துச் செல்கின்றன என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் எனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேச நான் விரும்பவில்லை, ஆனால் அதை மறைக்கவும் நான் விரும்பவில்லை. நெட்டிசன்கள் இருப்பதால் நான் ஒருவருடன் இரவு உணவிற்கு செல்வதை நிறுத்த மாட்டேன் என கூறினார்.