கூட்டத்திற்காக பந்தை பறக்க விடமாட்டேன்,வெற்றியே முக்கியம் – விராட் கோலி
- முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
- கூட்டத்திற்காக பந்தை பறக்க விடமாட்டேன் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே முதலாவது டி 20 போட்டி நடைபெற்றது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 207 ரன்கள் அடித்தது.இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 4 விக்கெட்டை இழந்து 18.4 ஓவர் 209 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 பந்தில் 94 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் நின்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.அவர் 6 பவுண்டரி , 6 சிக்சர்கள் அடித்தார்.இந்த போட்டி முடிந்த பின்னர் இந்திய அணி கேப்டன் விராட் பேசுகையில்,நான் இந்த இன்னிங்ஸில் முதல் பாதியில் விளையாடியதை இளம் வீரர்கள் பின்பற்ற வேண்டாம்.நான் முதல் பகுதியில் மிகவும் மோசமாக பேட்டிங் செய்தேன்.அப்போது நான் பந்தை அதிரடியாக ஆடும் பேட்ஸ்மேன் அல்ல,நிதானமாக விளையாடுபவன் என்று தெரிவித்தார் .மேலும் நான் கூடியிருக்கும் ரசிகர்கள் கூட்டத்திற்காக பந்தை பறக்க விட மாட்டேன்.ஆனால் நாட்டிற்காக விளையாடும் போது அணியின் வெற்றி மட்டுமே முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.