டெல்லியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.! 35 பேர் உயிரிழப்பு.! 50-க்கும் மேற்பட்டோர் காயம் .!
டெல்லியில் ஜான்சிராணி சாலையில் அனாஜ் மண்டி சாலையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தூங்கி கொண்டு இருக்கும் போது இன்று அதிகாலை 05.20 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 30 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனத்தில் தீயணைப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர்.
இந்த தீ விபத்தில் 35 பேர் இறந்து உள்ளதாகவும் ,50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாவும் தகவல் வெளியாகி உள்ளது.காயமடைந்த அனைவரும் ராம்மனோகர் லோகியா ,மற்றும் இந்து ராவ் ஆகிய இரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த தீ விபத்து நடந்த இடத்தில் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் பைகள் ,பாட்டில்கள் மேலும் சில பொருள்கள் வைக்கப்பட்டு இருந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.இந்த தீ விபத்தில் இருந்து இதுவரை 50 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்க்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தார்.