‘சூப்பர் ஸ்டார் சிவனோடு சிட்டிங்! எமனோடு கட்டிங்!’ – பன்ச் வசனம் மூலம் மேடையை தெறிக்கவிட்ட விவேக்!

Default Image
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக தர்பார் படம் தயாராகிவிட்டது. 
  • இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. 
  • இதில் விவேக் தனது காமெடியான பேச்சின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். 

சூப்பர் ஸ்டார் நடித்த தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் ரஜினிகாந்த, ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், விவேக், அனிருத் என படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அவ்விழாவில் பேசிய நடிகர் விவேக் தனது காமெடியான பேச்சின் மூலம் பலரையும் கவர்ந்தார். அவர் பேசுகையில் இயக்குநர் முருகதாஸ் பற்றி கூறுகையில், நம்மூரில் நீ என்ன பெரிய லாடு லபக்குதாஸா என கேட்போம். அதுபோல பாலிவுட்டில் நீங்கள் என பெரிய முருகதாஸா என கேட்கும் அளவிற்கு அங்கு புகழின் உச்சத்தில் இருக்கிறார். என தெரிவித்தார்.

சூப்பர் ஸ்டார் மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளார். எனவும் அவருக்கு இடையில் உடல் நிலை சரியில்லாத போது இங்கு அவருக்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்ததாகவும், அதன் பலனாய் அடுத்த சில வருடங்களிலேயே மீண்டும் பழைய தெம்புடன் இமயமலைக்கு பயணித்தார். எனவும் அதனை தனது பாணியில் சூப்பர் ஸ்டார் இமயமலை சென்று சிவனோடு சிட்டிங் போடுகிறார். அதேபோல எமனோடு கட்டிங் போடுகிறார் நகைச்சுவையான தனது பஞ்ச் வசனத்தோடு அரங்கை அதிரவைத்தார். அதன் பிறகு திரை பிரபலங்கள் பேசி முடித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
tvk vijay
deepika padukone l & k
Stalin's announcement Prison sentence
game changer shankar
gold price
TNAssembly