நடனம் ஆடுவதை நிறுத்திய பெண்ணின் முகத்தில் சுட்ட மர்ம நபர்..!
- கிராம தலைவர் மகளின் திருமண விழாவில் பெண்கள் நடமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு நடமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது .
- அப்போது பாடல் நின்றதால் நடனமாடி கொண்டு இருந்த பெண்கள் அனைவரும் நடனமாடுவதை நிறுத்தி உள்ளனர்.
- அப்போது மர்ம நபர் திடீரென நடனமாடாமல் இருந்த ஒரு பெண்ணின் முகத்தில் துப்பாக்கியால் சுட்டு விட்டார்
உத்திரபிரதேசத்தில் உள்ள சித்ரகூட் மாவட்டத்தை அடுத்து உள்ள கிராமம் டிக்ரா.இந்த கிராமத்தின் கிராம தலைவர் மகளின் திருமண விழாவில் பெண்கள் நடமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பெண்கள் குழுவாக நடனமாடி கொண்டு இருந்தனர்.
அப்போது பாடல் நின்றதால் நடனமாடி கொண்டு இருந்த பெண்கள் அனைவரும் நடனமாடுவதை நிறுத்தி உள்ளனர்.இந்நிலையில்நடனமாடுவதை பெண்கள் நிறுத்தியதால் குடிபோதையில் இருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என கூறுகிறார்.
அப்போது மற்றோருவர் துப்பாக்கியால் சுட வேண்டும் என கூறுகிறார்.உடனே குடிபோதையில் இருந்த அந்த நபர் திடீரென நடனமாடாமல் இருந்த ஒரு பெண்ணின் முகத்தில் துப்பாக்கியால் சுட்டு விட்டார்.
This video is from UP’s Chitrakoot .The lady was performing at a wedding and was shot by a man , possibly drunk, because she stopped after the music system development a glitch. She took a bullet in the jaw , hospitalised in Kanpur. @chitrakootpol says trying to make arrests pic.twitter.com/f9vVYopcYL
— Alok Pandey (@alok_pandey) December 6, 2019
பின்னர் வலியில் அப்பெண் துடிக்க அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.இது குறித்து போலீசார் கூறுகையில் , வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் ,விரைவில் குற்றவாளியை பிடித்து சிறையில் அடைப்போம் என மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். ஆனால் சில பேர் கிராம தலைவரின் குடும்ப உறவினர்களில் ஒருவர் தான் சுட்டதாக கூறப்படுகிறது.