உபர் ஓட்டுநர்கள் மீது‌ 2 வருடத்தில் 6000 பாலியல் புகார்கள்..! அதிர்ச்சி கொடுத்த உபர்..!

Default Image
  • 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் சுமார் 2 மில்லியன் மக்கள் தங்கள் கார்களில் பயணம் செய்துள்ளதாகவும் உபர் நிறுவனம் கூறியது.
  • அதில் கடந்த 2018 -ம் ஆண்டு சுமார் 3,000 பாலியல் புகார்கள் தங்கள் நிறுவனத்திற்கு வந்ததாகவும் இந்த புகார்கள் கடந்த 2017-ம் ஆண்டு விட 16 சதவீதம் குறைந்துள்ளது என உபர் நிறுவனம் கூறியுள்ளது.

உபர் நிறுவனம் உலகம் முழுவதும் பல நாடுகளில் இயங்கி வருகிறது. இந்த கார் நிறுவனத்தில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும் பாலியல் தொந்தரவு ஆளாக்கப்படுவதாகவும் பல நாடுகளில் இருந்து பல புகார்கள் எழுந்தன.

இதைத் தொடர்ந்து லண்டன் மற்றும் சில  நகரங்களில் உபர் நிறுவனத்தின்  கார் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிக்கையில் கடந்த 2018 -ம் ஆண்டு சுமார் 3,000 பாலியல் புகார்கள் தங்கள் நிறுவனத்திற்கு வந்ததாகவும் இந்த புகார்கள் கடந்த 2017-ம் ஆண்டு விட 16 சதவீதம் குறைந்துள்ளது எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் சுமார் 2 மில்லியன் மக்கள் தங்கள் கார்களில் பயணம் செய்துள்ளதாகவும் அந்த  நிறுவனம் கூறியது.அதில் 5,981 பயணிகளிடமிருந்து பாலியல் துன்புறுத்துதல் தொடர்பான புகார்கள் பதிவாகி உள்ளதாக உபர்  நிறுவனம் கூறியது. இருப்பினும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்