ஸ்டாலின் சிரித்துக்கொண்டே அழுதுகின்றார் – அமைச்சர் ஜெயக்குமார்

Default Image
 உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தைரியமில்லாமல் ஸ்டாலின் சிரித்துக்கொண்டே அழுது கொண்டிருக்கிறார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவரிடம் ,தெலுங்கானாவில் நடத்தப்பட்ட என்கவுன்டர் செயலானது மனித உரிமை மீறல் என  கனிமொழி  கூறியது குறித்து கூறுகையில், அவர் கூறிய கருத்து கண்டனத்துக்குரியது என்றும் கொடுஞ்செயல் குற்றவாளிகள் சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்களை எல்லாம் என்கவுண்டர் செய்வதில் எந்த ஒரு தவறும் இல்லை.
இதைப் போன்ற செயல்கள் மூலமாகவே குற்றங்கள் தடுக்கப்படும். எனவே அவரின் கருத்தானது பொது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத கருத்து. தெலுங்கானா அரசு நல்ல விஷயத்தை செய்துள்ளது இதை நாங்கள் வரவேற்கிறோம்.உள்ளாட்சித் தேர்தல் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி தேர்தல் ஆணையம் நிச்சயமாக தேர்தல் தேதியினை விரைவில் அறிவிக்கும். ஆனால் அறிவிப்பு வெளியிடும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தோஷப்படுவதாக காட்டினாலும் அவர் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இல்லை.சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் ஆனால் அவர் சிரித்துக்கொண்டே அழுதுகின்றார் ஸ்டாலின் என்று  ஜெயக்குமார் தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்