நிதியமைச்சர் அருண் ஜேட்லி அதிரடி! குடியரசுத் தலைவர், குடியரசுத் து. தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பள உயர்வு ?

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி  குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கான மாத ஊதியம் உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.

மக்களவையில் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த அருண் ஜேட்லி, குடியரசுத் தலைவருக்கான மாத ஊதியம் 5 லட்ச ரூபாயாகவும், குடியரசுத் துணைத் தலைவருக்கான மாத ஊதியம் 4 லட்ச ரூபாயாகவும் உயர்த்தப்படும் எனத் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்தவும் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பணவீக்கத்துக்குத் தக்கபடி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தச் சட்டத்தில் இடமுள்ளதாகவும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டார். இப்போது குடியரசுத் தலைவரின் மாத ஊதியம் ஒன்றரை லட்ச ரூபாயாகவும், குடியரசுத் துணைத் தலைவரின் மாத ஊதியம் ஒன்றேகால் லட்ச ரூபாயாகவும் உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment