நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2018-19ம் நிதி ஆண்டில் விவசாய கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடி!

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2018-19ம் நிதி ஆண்டில் நாடுமுழுவதும் விவசாய சந்தைகள் அமைக்க ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில்  அறிவித்தார்.

2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசி வருகிறார். பட்ஜெட் அறிவித்ததில் இருந்து ஆங்கிலத்திலும், இந்தியிலும் மாறி மாறி பேசி வருகிறார். அவர் பேசியதாவது-

2018-19ம் நிதிஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 சதவீதம் இருக்கும். அடுத்த நிதியாண்டு முதல் இரு காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 7முதல் 7.2 சதவீதம் வரை இருக்கும்.

2020ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்த அரசு முடிவு செய்துளள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது.

விவசாயிகளுக்காக விவசாய சந்தைகள் அமைக்க ரூ.2 ஆயிரம் கோடி 2018-19ம் நிதி ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்படும். நாட்டில் உணவு பதப்படுத்தும் தொழில் நன்று வளர்ச்சி அடைந்து 8 சதவீதத்தை எட்டியுள்ளது. அடுத்த நிதியாண்டில் இதற்கான நிதி ஒதுக்கீடு இரட்டிப்பாக்கப்படும்.

விவசாய கழிவுகளை எரிக்காமல் மாற்று வழியில் பயன்படுத்த மாற்றுத்திட்டம் செயல்படுத்தப்படும். உணவு பதப்படுத்தலுக்கு ரூ.1400கோடி, கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.685 கோடி கூடுதலாக ஒதுக்கீடு.

கிசான் கிரெடிட் கார்டு வசதியை மீனவர்கள், கால்நடை விவசாயிகளுக்கும் வழங்க பரிந்துரை செய்யப்படும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment