உள்ளாட்சித் தேர்தலுக்கு தடைகோரிய வழக்கு – இன்று காலை தீர்ப்பு

உள்ளாட்சித் தேர்தல் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறாமல் இருந்த நிலையில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆனால் இதற்கு இடையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக சார்பாக வார்டு மறுவரையரை பணிகளை மேற்கொள்ளாமல் தேர்தல் நடத்த கூடாது என்றும் அதற்கு தடைகோரியும் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில்,9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தலாமா என்று உச்சநீதிமன்றம்  கேள்வி எழுப்பியது.இதற்கு  தமிழக அரசு சார்பில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தல் நடத்த சம்மதம் தெரிவித்தது.இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.இன்று நடைபெறும் விசாரணையில் தெரிந்து விடும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்று …