ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 4 வயது சிறுவன்! மீட்க போராடிவரும் மீட்புக்குழுவினர்!

Default Image

ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி எனும் மாவட்டத்தில்  4 வயது மிக்க ஒரு சிறுவன் தனது வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருக்கையில் அந்த தோட்டத்தில் சரிவர பராமரிக்கப்படாமல் இருந்து வந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டான்.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் உடனே வந்துவிட்டனர். பின்னர், அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு போன் செய்தனர். விரைந்து வந்த மீட்புக்குழுவினர் சிறுவனை காப்பாற்ற தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

தற்போது சிறுவன் 15 அடி ஆழத்தில் இருக்கிறான். அவனுக்கு தற்போது ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. மீட்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் அம்மாவட்ட ஆட்சியர் மீட்புப்பணிகளை கண்காணித்து வருகிறது.

தமிழ் நாட்டில் திருச்சி மாவட்டம் நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 2 வயது சிறுவன் சுஜீத்தை கடைசி வரை காப்பாற்ற முடியாமல் போனது தற்போதும் மனதை கணமாக்குகிறது. அதன் பிறகு அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆழ்துளை கிணறுகளையும் சரிவர பராமரித்து உபயோகப்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட சொல்லி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதனையும் மீறி இவ்வாறு நடைபெறுவது வேதனைக்குரியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்