பாகிஸ்தானின் 629 இளம்பெண்களை விலைக்கு வாங்கி சீனர்கள் திருமணம்..!
- சீனாவில் ஆண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது பெண்களின் எண்ணிக்கை 3 கோடியே 40 லச்சத்துக்கும் குறைவாக உள்ளது.
- சீனாவை சேர்ந்த ஆண்களுக்கு திருமணம் முடிப்பதற்கு பாகிஸ்தானிலிருந்து 629 இளம்பெண்கள் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் உள்ள மக்கள் தொகையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மகப்பேறின்போது கருவில் இருந்த பெண்சிசுவை கலைக்கப்பட்டது போன்ற காரணத்தால், பெண் குழந்தைகளின் பிறப்பு குறைந்தது.
இதனால் ஆண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது பெண்களின் எண்ணிக்கை 3 கோடியே 40 லச்சத்துக்கும் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் பாகிஸ்தானில் உள்ள இளம்பெண்களை விலைக்கு வாங்கி சீனர்கள் திருமணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏழை குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்களை விலைக்கு வாங்கி, அல்லது கடத்தி சீனர்களிடம் ஒரு தனிப்பட்ட கும்பல் விற்று வருகிறது. இந்த மாதிரி ஒரு செயலை இருநாடுகளின் அமைப்புகள் நடத்திய விசாரணையின் போது இது தெரிய வந்துள்ளது.
ஆனால், சீனாவுடனான உறவு பாதிக்கப்படும் என்பதால், திருமணத்திற்காக பெண்கள் விற்கப்படும் விஷயத்தை விசாரிப்பதற்கு, பாகிஸ்தான் அரசு தடை விதித்தது. இதனால் பெண்கள் விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட, 31 சீனர்களை, பாகிஸ்தான் நீதிமன்றம், கடந்த அக்டோபரில் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.