நாளையை போட்டியில் சிக்சர் அடித்து சாதனை படைக்க உள்ள ரோகித்..!
- ரோஹித் சர்வதேச போட்டிகளில் இதுவரை ரோஹித் 399 சிக்ஸர் விளாசியுள்ளார்.
- இந்திய அணியில் சர்வதேச போட்டியில் 400 அடிக்கும் முதல் வீரர் என்ற சாதனை படைக்கவுள்ளார்.
நாளை இந்தியா , வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே டி20 போட்டி தொடங்க உள்ளது. இப்போட்டியில் இந்திய வீரர் ரோஹித் ஒரு சிக்ஸர் அடிக்கும் பட்சத்தில் ஒரு புதிய சாதனை படைக்க உள்ளார்.
ஒருநாள் , டெஸ்ட் மற்றும் டி 20 ஆகிய சர்வதேச போட்டிகளில் இதுவரை ரோஹித் 399 சிக்ஸர் விளாசியுள்ளார்.இந்நிலையில் ரோஹித் ஒரு சிக்சர் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச போட்டியில் 400 சிக்ஸர் அடிக்கும் மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெறவுள்ளார்.
இதற்கு முன் கிறிஸ் கெய்ல் 534 , பாகிஸ்தான் அணி வீரர் அஃ ப் ரிதி 476 சிக்ஸர் விளாசி உள்ளனர். இந்திய அணியில் சர்வதேச போட்டியில் 400 அடிக்கும் முதல் வீரர் என்ற சாதனை படைக்கவுள்ளார். ஒருநாள் போட்டியில் 232 ,டெஸ்ட் 52 , மற்றும் டி 20 போட்டியில் 115 சிக்ஸர் விளாசியுள்ளார்.
இந்த ஆண்டு சர்வதேச போட்டியில் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்று உள்ளார்.இந்த ஆண்டு 67 சிக்ஸர் விளாசி உள்ளார்.