சூடான் தீ விபத்து ! பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சூடான் நாட்டில் உள்ள ஒரு பீங்கான் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் அங்கு பணியாற்றிய 18 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த 18 பேரில் 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சூடான் தீ விபத்தில் தமிழர்கள் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் அதன் உண்மை நிலையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார் .சூடானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் காணாமல் போன தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“கை இருக்கும், கால் இருக்கும்., ஆனால்.?” ஆளுநரை அஜித் பட டயலாக் பேசி விமர்சித்த அன்பில் மகேஷ்!
April 16, 2025
இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!
April 16, 2025