400000 சதுர அடி பரப்பளவு ! பிரம்மாண்ட தொழிற்சாலையை அமைக்க்கும் நிறுவனம்
புதிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு ஆலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக ஏத்தெர் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முதலீட்டார்கள் மாநாடு முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.இந்த நிலையில் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டது ஏத்தெர் எனெர்ஜி (Ather Energy) நிறுவனம்.இந்த நிறுவனம் சென்னை உள்ளிட்ட நகரங்களில் தனது முதல் ஏத்தெர் எனெர்ஜி 450 (ather energy 450) என்ற மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகின்றது.
ஓசூரில் புதிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு ஆலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக ஏத்தெர் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த ஒப்பந்தத்தின்படி தமிழகத்தில் உள்ள ஓசூர் தொழிற்பேட்டையில் சுமார் 4,00,000 சதுர அடி பரப்பளவில் தொழிற்சாலையை நிறுவ முடிவு செய்துள்ளது.இனி வரும் வருடங்களில் 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் தனது தொழிற்சாலைகளை நிறுவ முடிவு செய்துள்ளது. இந்த தொழிற்சாலையின் உற்பத்தி தொடங்கப்பட்டால் ஆண்டுக்கு 500000 மின்சார ஸ்கூட்டர்கள் வரை உருவாக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 4000-த்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.