இப்படி சமைத்து சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருமாம்..!

Default Image

தமிழர்களின் முக்கிய உணவு பட்டியலில் சாப்பாடு எப்போதும் இடமுண்டு. இப்போது உள்ள பலர் நம் பாரம்பரிய பழக்கத்தை மறந்துவிட்டு துரித உணவுகளுக்கு மாறிவிட்டன. அதனால் ஏற்படும் தீமையை உணர்ந்து பலரும் முன்னோர்களின் பழக்கத்தை பின்பற்றி வருகின்றன.

நம் தினமும் சாப்பிடும் சாப்பாடு எப்படி சாப்பிடலாம் , எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது, எந்த பாத்திரத்தில் சமைக்கக்கூடாது என்பதை பார்ப்போம்.

பழைய சோறு:

Related image

நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான காரணம் பழையசோறு.

இரவு சாப்பிட்ட பிறகு மீதியுள்ள சாப்பாட்டில் தண்ணீர் ஊற்றி அடுத்த மறுநாள் காலையில் நீராகாரத்தில் சாப்பிட்டு வந்தனர் இந்தப் பழைய சோறு உடல் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு எனர்ஜியைக் கொடுக்கும்.

மேலும் பழைய சோற்றில் புரதச்சத்து , இரும்புச்சத்து ,பொட்டாசியம் என பல வகையான சத்துகள் உள்ளன.

உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் இருப்பதுடன்  ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.

குக்கரில் சமைக்கக்கூடாது:

Image result for குக்கரில் சமைக்க கூடாது
நாம் தினம் சாப்பிடும் சாப்பாட்டை அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரலாம் என பலர் கூறுகின்றனர். அது உண்மை இல்லை காரணம் கஞ்சி வடிக்காமல் குக்கரில் வேக வைத்து சாப்பிடுவது தான் முக்கிய காரணம்.

அது மட்டுமில்லாமல் குக்கரில் சமைத்து தொடர்ந்து வந்து சாப்பிட்டு வந்தால் உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும் என ஆய்வில் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

 சாப்பாட்டை இப்படி சாப்பிடக்கூடாது:

  • சாப்பாட்டில் கொதிக்கக் கொதிக்க சாப்பிடக்கூடாது.
  • மிதமான சூட்டில் தான் சாப்பிடவேண்டும்.
  • ஜில்லென்று அல்லது ஆறிப்மாறிப் போய் சாப்பிட்டால் கீழ்வாதம், மூட்டுவாதம் ஏற்படும்.
  • பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது. மோரை கடைந்து ஊற்றி சாப்பிடலாம்.
  • வடித்த கஞ்சியை ஆறிப்போய் குடித்தால் அது வாய்வு உண்டாகும்.

 சாப்பாட்டை இப்படி சாப்பிடலாம்:

  •  சாப்பாடு வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பை போட்டு பருகினால் கண் எரிச்சல் பித்தம் ஆகியவை குறையும்.
  • சாப்பாடு உலையில் கொதிக்கும் போது கஞ்சியை எடுத்து பருகினால் நீர்க்கடுப்பு நீங்கும்.
  • சாப்பாடு வெதுவெதுப்பாக இருக்கையில் பசும் பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர் தாகம் ஏற்படுவதும்  பித்தம் உண்டாவதும் குறையும்.
  •  பச்சரிசி சாப்பாட்டில் பால் சேர்த்து சாப்பிட்டால் வாதம், பித்தம் நீங்கும்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்