அண்ணா பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!
தொடர் மழையால் நாளை திங்கள் கிழமை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகள் , 4 வளாகங்களின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது .தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் என பதிவாளர் கருணமூர்த்தி அறிவித்து உள்ளார்.