தேர்தலை நிறுத்த வேண்டும என எந்த இடத்திலும் திமுக சொல்லவில்லை – ஸ்டாலின்

Default Image

கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலை நிறுத்த பல வழிகளில் அதிமுக அரசு முயற்சித்து வருகிறது, மறைமுகமாக வேறு ஆட்களை வைத்து வழக்கு தொடர்கிறது. தேர்தலை நிறுத்த வேண்டும என எந்த இடத்திலும் திமுக சொல்லவில்லை, பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றை முறையாக கடைபிடித்து தேர்தலை நடத்த வேண்டும் என்று தான் சொல்லியிருக்கிறோம்,அதை தான் நீதிமன்றமும் சொல்லியிருக்கிறது .ஆனால் ஊடகங்கள் திமுக தான் வழக்கு தொடர்ந்து தேர்தலை நிறுத்தி விட்டது என தவறான தகவலை பரப்பிவருகின்றன .புதிய மாவட்டங்கள் உருவாக்கியிருப்பதை வரவேற்கிறேன், ஆனால் அந்த மாவட்டங்களில் வரையறை செய்து வெளியிடவில்லை,

பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீடு போன்ற விஷயங்களும் முறையாக செய்யபடவில்லை. தேர்தல் ஆணையத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை , தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லை, அதனால் தான் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதற்காக தான் நீதிமன்றம் சென்றோமே தவிர, தேர்தலை நிறுத்த அல்ல, எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க திமுக தயாராகவே உள்ளது என்றார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்