தந்தை திட்டியதால் ரயில் முன் பாய்ந்த மகன்..!
தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவன் தந்தை திட்டியதால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.
கோவை லெனின் நகரை சேர்ந்த மூர்த்தீஸ்வரன் மரவேலை செய்ந்து வருகிறார். இவரது மகன் அபினேஷ் கணபதி அருகில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்து கொண்டிருக்கிறார். அப்போது நடந்து முடிந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் இதை அறிந்த தந்தை அபினேஷை கண்டித்துள்ளார் இதனால் மனமுடைந்து அபினேஷன் காணப்பட்டார்.
இந்நிலையில் அபினேஷ்வர் நேற்று மாலை டியூசன் சென்று விட்டு வீடு திரும்பவில்லை என்றவுடன் அபினேஷன் தந்தை பதற்றம் அடைந்தார். பின்னர் உறவினர்களுக்கு போன் செய்து கேட்டுள்ளார் பின்பு உறவினர்கள் அப்பகுதியை சுற்றி தேடி பார்த்தனர். இந்நிலையில் அபினேஷன் கிடைக்காதல் அருகில் உள்ள சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் பீளமேடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ரயில் மோதி சிறுவன் இறந்து கிடப்பதாக தகவல் வந்துள்ளது.
அதை கேட்டதும் அபினேஷனின் தந்தை அங்கு சென்று பார்க்கும் போது ரயிலில் அடிபட்டு உயிர் இழந்து கிடந்தது அவரது மகன் என்று தெரியவந்தது. மேலும் தந்தை திட்டியதால் மனமுடைந்த அபினேஷன் ரயிலில் பாய்ந்து உயிர் இழந்துருக்கலாம் என்று காவல்துறை முதல்கட்ட விசாரணையில் கூறப்பட்டது. இச்சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல,மனித உயிரை மாய்த்துக்கொள்ள எவருக்கும் உரிமை இல்லை. தற்கொலை எண்ணம் வரும் போது உரிய ஆலோசனைப் பெற்றால் புதிய வாழ்கைக் காத்துக்கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.