தளபதி 64.! தலைப்பு கூட அறிவிக்கவில்லை அதற்குள் பிரமாண்ட விலைக்கு வாங்கிய சன்டிவி..!
விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் ரூ.35 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளது.
தளபதி விஜய், மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். கடந்த ஒரு மாதம் முன்பு படபிடிப்பு ஆரம்பித்து சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட்டது.பின்னர் சென்னையில் முடித்துவிட்டு டெல்லி சென்று ஒரு பல்கலைக்கழகத்தில் முக்கியமான காட்சிகளை எடுக்கப்பட்டது.பின்னர் படபிடிப்பது முடித்துவிட்டு சென்னை திரும்பிய படக்குழு அடுத்தகட்டம் கர்நாடகாவிற்கு ஒரு சில நாட்களில் செல்ல இருக்கிறது.
இந்நிலையில் கடந்த வருடங்களில் வெளி வந்த சர்க்கார் மற்றும் பிகில் திரைப்படங்கள் படபிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போதே அதிக விலை குடுத்து சேட்டிலைட் உரிமையை சன்டிவி நிறுவனம் வாங்கியுள்ளது. அந்த சமயம் உலகளவில் TRP-யும் ரேட்டிலும் சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து தற்போது நடித்து வரும் தளபதி 64 படத்தின், படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில் சேட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி நிறுவனம் அதிக விலைக்கி வாங்கியுள்ளது. என்று சன் டிவி நிறுவனம் தனது Official டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனால் தளபதி 64 படத்திற்கு Promotion-க்கு பஞ்சமே இருக்காது என்று எதிர்பாக்கப்படுகிறது. இந்நிலையில் சுமார் 35 கோடி ரூபாய்க்கு வங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
Sun TV has acquired the satellite rights of @actorVijay’s #Thalapathy64
#Thalapathy64withSunTV@actorvijay pic.twitter.com/PtSkxAS0qL
— Sun TV (@SunTV) November 29, 2019
இதை போன்று இப்படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் என்று தெரிந்தவுடன் Sony music south நிறுவனம் இது வரை இல்லாத அளவுக்கு அதிக விலைக்கு சுமார் 4 கோடி ரூபாய்க்கு வாங்கியிருப்பது தெரிவிக்கப்படுகிறது. மற்றும் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார்கள்.