இந்த உணவை சாப்பிட்ட பின் கண்டிப்பாக பால் குடிக்க கூடாது..!

Default Image

நம் தினமும் சாப்பிடும் உணவு பொருட்களில் மிகவும் முக்கியமான உணவு பொருளாக பால் உள்ளது. ஏனென்றால் இந்தபாலில் ஏராளமான வைட்டமின்கள் , புரோட்டீன்கள் கனிமச் சத்துக்கள், கொழுப்புகள் அதிக அளவில் இருக்கிறது.
Image result for பால்
பாலில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் D  உடலில் உள்ள எலும்பிற்கு மிகுந்த வலிமையும் , உறுதியும் தருகிறது. தினமும் பால் குடிப்பதால் எலும்பு தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்வளவு நன்மை  உள்ள பாலை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது அது நமக்கு கெடுதலையும் தருகிறது.
இந்நிலையில் சில உணவுகளை சாப்பிட்ட பின் பால் குடிப்பதனால் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.
சிட்ரஸ் பழங்கள்:
Image result for சிட்ரஸ் பழங்கள்
அதாவது ஆரஞ்சு , எலும்பிச்சை மற்றும் சாத்துக்குடி சாப்பிட்டு பின் பால் குடித்தால் அது நமக்கு வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுத்தும்.
பாகற்காய்:
Image result for பாகற்காய்
பாகற்காய் சாப்பிட்டபின் பால் குடித்தால்  முகத்தில் கருமையான புள்ளிகள் உண்டாகும்.
முள்ளங்கி:
Image result for முள்ளங்கி
முள்ளங்கியை சாப்பிட்ட பிறகு பால் குடிக்கக்கூடாது. அப்படி முள்ளங்கி சாப்பிட்ட பிறகு பால் குடித்தால் பல சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மீன்:
Image result for மீன்
மீன் சாப்பிட்ட பிறகு பால் குடிக்க கூடாது. அப்படி பால் குடிப்பதனால் நமக்கு செரிமான மண்டலம் பாதிப்படையும், சில சமயங்களில் மீன் சாப்பிட்டு உடனே பால் குடித்தால்  அடிவயிற்று வலி மற்றும் உடலில் வெள்ளை புள்ளிகள் வர வாய்ப்புண்டு.
வெண்டைக்காய்:
Image result for வெண்டைக்காய்
வெண்டைக்காய் சாப்பிட்டதும் பால் குடித்தால் நம்முடைய முகத்தில் கரும்புள்ளிகள் வரக்கூடும்.
பெர்ரி பழம் : 
Image result for பெர்ரி பழம்
பெர்ரி பழங்களை சாப்பிட்ட பின் பால் குடித்தால் முகத்தில் பல சரும பிரச்சனைகள் உண்டாகும். அரிப்பு முகத்தில் சுருக்கங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்