வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு..! அதிரடி மன்னன் , பிராவோ நீக்கம்..!
இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். இப்போட்டி வருகின்ற 06-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை அறிவித்து இருந்த நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியும் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடருக்கான அணியை அறிவித்து உள்ளது.
இந்த தொடரில் ரஸ்ஸல் மற்றும் டிவைன் பிராவோ வெஸ்ட் இண்டீஸ் அணியின் இரண்டு தொடரிலும் இடம்பெறவில்லை. ரஸ்ஸல் தொடர்ந்து உள்ளூர் டி20 போட்டிகளில் வருவதால் இதனால் தேசிய அணியில் இடம்பெறவில்லை. மூத்த வீரர் கிறிஸ் கெயில் சிறிது காலம் மூன்று வித போட்டிகளில் இருந்தும் ஒதுங்கி இருப்பதாக கூறியதால் அவர் இந்த தொடரில் தேர்வு செய்யவில்லை.
ஒருநாள்தொடர் அணி வீரர்கள்:
காரி பியர்ரே, பொல்லார்டு, நிக்கோலஸ் பூரன், தினேஷ் ராம்தின், செர்ஃபேன் ரூதர்போர்டு, பாபியன் ஆலன், ஷெல்டன் காட்ரேல், ஷிம்ரான் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், பிரான்டன் கிங், ஈவின் லீவிஸ், கீமோ பால், சிம்மன்ஸ், ஹெய்டன் வால்ஷ் ஜூனியர், கேஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் இடம்பெற்றனர்.
டி20 தொடர் அணி வீரர்கள்:
ஈவின் லீவிஸ், கீமோ பால், காரி பியர்ரே, பொல்லார்டு, நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ செப்பெர்ட், ஹெய்டன் வால்ஷ் ,சுனில் ஆம்ரிஸ், ராஸ்டன் சேஸ், ஷெல்டன் காட்ரேல், ஷிம்ரான் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அல்சாரி ஜோசப், பிரான்டன் கிங், ஆகியோர் இடம்பெற்றனர்.