மணிகண்டனால் எனது அரசியல் வாழ்கை வீணாகி விட்டது..!கொள்ளை தலைவன் முருகன் ..!
திருச்சியில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி 13 கோடி மதிப்புள்ள 29 கிலோ எடை கொண்ட தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட உள்ள முருகனை நேற்று முன்தினம் 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து முருகனிடம் விசாரித்து வருகின்றனர்.நேற்று நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விசாரணையில் முருகன் கூறுகையில் , லலிதா ஜுவல்லரி துளையிட எங்களுக்கு நான்கு நாட்கள் தேவைப்பட்டது.
பின்னர் கொள்ளையடித்த நகையை மதுரையிலுள்ள கணேசன் வீட்டிற்கு சென்று கொண்டு மெஷினில் எடை போட்டு சுரேஷுக்கு 6 கிலோவும் , கணேசனுக்கு 7 கிலோ கொடுத்து விட்டு பின்னர் நானும் சுரேஷும் நீடாமங்கலம் வந்தோம் .காரில் வரும்போதே செல்போன் மூலமாக மணிகண்டனை நீடாமங்கலம் வரச்சொன்னேன்.சுரேசை நீடாமங்கலத்தில் இறக்கிவிட்டு நான் சென்னை புறப்பட்டேன்.
சுரேஷும் , மணிகண்டனும் அந்த நகையை எடுத்துக் கொண்டு திருவாரூர் செல்லும்போது போலீசிடம் மாட்டிக் கொண்டனர். இந்த செய்தியை அறிந்த நான் சென்னை வரை நகை எடுத்துக்கொண்டு சென்றால் போலீசில் மாட்டிக் கொள்வோன் என எண்ணி பெரம்பலூரில் உள்ள வனப்பகுதியில் சிறிது அளவு நகையை புதைத்துவிட்டு கிளம்பிவிட்டேன்.
மணிகண்டன் மட்டும் போலீசாரிடம் சிக்காமல் இருந்தால் நான் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக ஆகி இருப்பேன் .எனது ஆசை அரசியல்வாதி ஆக வேண்டும் என்பது தான் நேரடியாக அரசியல் சென்று வெற்றி பெறுவது ரொம்ப சிரமம். அதுவே தமிழ் சினிமாவில் இருந்து பிறகு ஏதாவது ஒரு கட்சியில் சேரவேண்டும் என நான் திட்டமிட்டு இருந்தேன்.
ஆனால் மணிகண்டன் சிக்கியதால் வேறு வழியில்லாமல் நானும் சரணடைய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை சில போலீசாருக்கு நான் பங்கு கொடுத்து உள்ளேன். அவர்களின் பெயர்களை நான் கூற விரும்பவில்லை. வேலூர் சிறையில் தான் கணேசனும் , எனக்கும் பழக்கம். கணேசன் நகைகளை உருக்கி விற்பதில் கில்லாடி என்பதால் அவரை பங்குதாரராக நாங்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஏற்றுக் கொண்டோம்.
நாங்கள் ஏழை வீட்டிலும் , கடையிலும் கொள்ளை அடிக்க மட்டும் நகைக்கடை மற்றும் தொழிலதிபர் வீட்டில் தான் கொள்ளை அடிப்போம் என கூறினார்.