பொருளாதாரம் மந்த நிலை பற்றி பேசியபோது தூங்கிய மத்திய அமைச்சர் ..!

Default Image

மக்களவையில் நேற்று முன்தினம் நாட்டின் பொருளாதாரம் பற்றிய விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி குறைந்து கடந்த 7 ஆண்டுகளாக மந்தநிலையில் இருப்பதாகவும் , வேலைவாய்ப்பு இல்லை எனவும் கருத்துக்களை தெரிவித்தனர்.
அதிலும் குறிப்பாக ஆனந்த் சர்மா சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.அதில் தொழிற்சாலைகள் மூடியதால் நாட்டில் 2.5 கோடி தொழிலாளர்கள் வேலையை இழந்து உள்ளனர்.இதற்கு பாஜகவின் தவறான பொருளாதார கொள்கை என குற்றம் சாட்டினர்.
இதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல நேரங்களில் உணர்ச்சிகரமாக பேசினார். அப்போது இந்தியாவின் பொருளாதாரம் தான்  கீழே சென்றுள்ளது தவிர மந்த நிலைக்கு தள்ளப் படவில்லை எனக் கூறினார்.
அப்போது மத்திய திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே சீதாராமன் பேசிக்கொண்டிருக்கும்போது அவருக்கு பின்னால் தூங்கிக்கொண்டிருந்தார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இதற்கு நெட்டிசன்கள் பலர் பல கருத்துக்களை தெரிவித்து வந்தன. அதில் நிர்மலா சீதாராமன் பேச்சு சோர்வை ஏற்படுத்தியதால் எம்.பி தூங்குகிறார் போல எனவும் , நிர்மலா சீதாராமன் பேசியது என்னவென்றே புரியாமல் திடீரென  கை தட்டுகிறார் என  கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் சிலர் உங்களின் பின்புறம் எம்.பி ஒருவர் சுகமாக தூங்குகிறார் என கருத்துகளை தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்