மின் விபத்து நிவாரணம் ரூ.5,00,000 உயர்வு..!
மின்சாரம் வாரியம் சார்பில் மின் விபத்துகளின் மூலம் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ .2 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில் நிவாரணத் தொகை ரூ .2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக மின்வாரியம் உயர்த்தியுள்ளது.
மழை மற்றும் புயலின் போது மின்கசிவு ஏற்பட்டு மின் விபத்து ஏற்படுகிறது. வீடுகளை தவிர பொது இடங்களில் மின் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் பொது மக்களுக்கு மின்சார வாரியம் சார்பில் இரண்டு லட்சம் நிவாரணத் தொகையை கொடுக்கப்பட்டு வந்தது தற்போது அது இந்த தொகை 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.