இன்றைய (29.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…
மேஷம் :
இன்றைய நாளில் நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும்.உங்களுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
ரிஷபம் :
இன்றைய நாளில் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமதம் உண்டாகும். தொழில் சம்பந்தமாக புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது ஆகும்.இருசக்கர வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
மிதுனம்:
இன்றைய நாளில் உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும் நாள் ஆகும் .
கடகம் :
இன்றைய நாளில் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் பெரிய மனிதர்களின் ஆதரவால் அனுகூலப்பலன் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும் நாள் ஆகும்.
சிம்மம் :
இன்றைய நாளில் நீங்கள் எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வெளி வேலைகளால் அலைச்சல் மற்றும் டென்ஷன் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
கன்னி :
இன்றைய நாளில் உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது தெம்பை தரும். கடன்கள் குறையும்.
துலாம்:
இன்றைய நாளில் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
விருச்சிகம் :
இன்றைய நாளில் உங்களுக்கு பணியில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும்.தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
தனுசு
இன்றைய நாளில் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணியில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
மகரம் :
இன்றைய நாளில் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடையலாம்.
கும்பம்
இன்றைய நாளில் நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள்.பணியில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்ககூடிய வாய்ப்புகள் உருவாகும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும்.
மீனம் :
இன்றைய நாளில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.