நான் எடப்பாடி தலைமையிலே செயல்படுவேன்..தினகரன் அளித்த பதவி வேண்டாம்..சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ..

Default Image

இரண்டு மாதங்களுக்குப் பிறகு அரசியல் நடவடிக்கைகளில் களம் இறங்கியுள்ள அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கட்சிப் பொறுப்புகள் தொடர்பாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தனது ஆதரவாளர்களாகவும் சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும் உள்ள 19 பேருக்கு கட்சிப் பொறுப்புகளை டிடிவி தினகரன் அளித்துள்ளார்.
மகளிர் அணி இணைச் செயலாளர்களாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெயந்தி பத்மநாபன், சத்யா பன்னீர்செல்வம், உமாமகேஸ்வரி, எம்.சந்திரபிரபா ஆகியோரை நியமித்து டி.டி.வி.தினகரன் அறிவித்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன் நேற்று அறிவித்த மகளிர் அணி இணைச் செயலாளர் பதவி தனக்கு தேவையில்லை என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயை இயங்கப் போவதாகவும் தெரிவித்தார்.
சத்யாவின் இந்த பேச்சு அதிமுக அம்மா அணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்