80 வயது தம்பதிக்கு விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்..!
மதுரை திருநகரை சார்ந்தவர் வேலுசாமி( 82) இவரது மனைவி கஸ்தூரி. வேலுச்சாமி வேளாண்மை துறை அலுவலகத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிகளுக்கு கடந்த 1962-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலையம்பட்டியில் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் வேலுச்சாமி வழக்கு ஓன்று தொடுத்தார். அதில் கஸ்தூரியிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரணையின் போது கஸ்தூரி தரப்பில் இருந்து இருவரும் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கு வேலுசாமி தரப்பில் கடந்த 25 வருடங்களாக நாங்கள் இருவரும் பிரிந்து தான் வாழ்கிறோம். எனவே விவாகரத்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். பின்னர் இருதரப்பு வாதங்களைக் கேட்டு பிறகு விசாரணை முடிவில் நீதிபதி சுமதி அவர்கள் இருவருக்கும் விவாகரத்து வழங்க உத்தரவிட்டார்.