வந்துவிட்டது வாட்ஸாப்பிலும் கால் வெயிட்டிங் சேவை!
வாட்ஸ்அப் நிறுவனமானது அவ்வப்போது தங்களது பயணர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் புதிய அப்டேட்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் ஏற்கனவே ஆண்ட்ராய்டு இயங்குதள வாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி. குரூப் பிரைவசி என பல அம்சங்களை வெளியிட்டு இருந்தது.
தற்போது புதிய வசதியாக ஆப்பிள் IOS இயங்குதளத்தில் வாட்ஸப் வெர்ஷன் 2.19.120 இயங்குதளத்தில் பார்வையற்றவர்களும் பயன்படுத்துகையில்பிரைல் கீபோர்டு மேலும், கால் வெயிட்டிங் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த கால் வெயிட்டிங் சேவையானது நாம் சாதாரண கால் பேசிக்கொண்டிருக்கையில் வாட்ஸ்அப் கால் வந்தால், அதற்கான நோட்டிபிகேஷன் பயணர்களுக்கு வந்துவிடும். இந்த சேவை தற்போது ஆப்பிள் இயங்குதளத்தில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில், ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்திலும் வரும் என கூறப்படுகிறது.